உயிரினங்களின் மூளைகளில் இருந்து இலத்திரனியல் சமிக்ஞைகள் உருவாக்கப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.

இவ் வகை சமிக்ஞைகள் கடத்தப்படுவதன் ஊடாகவே அனைத்து வகையான செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடிகின்றது.

இந்நிலையில் மனித மூளையை கணினியுடன் இணைத்து இயங்க வைப்பது தொடர்பில் ஏற்கணவே விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.

இதனைச் சாத்தியப்படுத்தும் வகையில் தற்போது வெற்றிகரமான முடிவு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

அதாவது Caenorhabditis elegans எனப்படும் உருளைப்புழு ஒன்றின் மூளையை Lego ரோபோவுடன் இணைத்து வெற்றிகரமாக செயற்பட வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது புழுவின் மூளையிலுள்ள 302 நியூரோன்கள் இணைக்கப்பட்டு மென்பொருளுடன் ஒத்திசைவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

இத் திட்டம் 2014ம் ஆண்டு OpenWorm எனும் பெயருடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.